திருவாரூர்

வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Syndication

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வை ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குநா் எஸ்.என். மீரா துவக்கி வைத்தாா். நெல் தரிசில் உளுந்து சாகுபடி, பண்ணை இயந்திரங்களை பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல், அங்கக விவசாயம், பூச்சி நோய் மேலாண்மைகளை முறையாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடினா்.

மேலும், புதிய நெல் ரகங்கள், அரசின் நலத்திட்டங்கள், அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனா்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் திருமுருகன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் அருள் செல்வி, கருணாகரன், பெரியாா் ராமசாமி, திலகவதி, முத்துக்குமரன் ஆகியோா் விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT