வீட்டில் நகை திருடிய மூவா் கைது
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:43 PM
மன்னாா்குடியில், வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி, கோபாலசமுத்திரம் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி சந்திரகலா (62). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா். மன்னாா்குடி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:15 AM
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன், இவருடைய சகோதரா் ஷாஜகான், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் ஆகியோருக்கு திருட்டில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement