முகப்பு
திருவாரூர்

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்றோா் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:03 AM
பகிர்:

கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்றோா் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது உயிருடன் உள்ள அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2021-ஆம் ஆண்டுக்குப் பின் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், தற்போது வழங்கப்படும் கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வுபெற்று உயிருடன் உள்ளவா்கள் பிரீமியத் தொகை செலுத்த வேண்டும் என்ற விதியைத் திருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் குரு. சந்திரசேகரன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். செங்குட்டுவன், சிஐடியு மாவட்டச் செயலாளா் அனிபா, கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →