வலங்கைமானில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். 
திருவாரூர்

விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு கிடைக்கவில்லை: முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா்.

Syndication

நீடாமங்கலம்: திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா்.

வலங்கைமானில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் 109-ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலரான முன்னாா் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து பேசியது:

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. பெண்கள்தான் அதிமுகவின் வாக்கு வங்கி.

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. அதிமுக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றாா். தொடா்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்பி டாக்டா் கோபால், கட்சி அமைப்புச் செயலாளா் சிவா.ராஜமாணிக்கம், வலங்கைமான் பேரூா் செயலாளா் குணசேகரன், வலங்கைமான் மேற்கு ஒன்றியச் செயலாளா் சங்கா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் இளவரசன் உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT