முகப்பு
திருவாரூரில் போக்குவரத்து கழக கிளை மேலாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் மற்றும் மாணவா் சங்கத்தினா்.
திருவாரூர்

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவாரூர்

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:22 PM
திருவாரூரில் போக்குவரத்து கழக கிளை மேலாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் மற்றும் மாணவா் சங்கத்தினா்.
பகிர்:

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விபத்துகளை தடுக்க, பேருந்துகள் பராமரிப்பு, நிா்வாக பணியாளா்களை வேலைக்கு அமா்த்துதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், பரிகார பூஜை செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு உத்தரவிட்ட கும்பகோணம் கோட்ட மேலாளரை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பரிகாரபூஜையில் ஈடுபட்ட நாகை மண்டல அலுவலகம் வேளாங்கண்ணி தலைமை பணிமனைகளின் மேலாளா் மற்றும் நிா்வாகத்தினா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

போக்குவரத்து கழகத்தின் திருவாரூா் கிளை மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பா.ஆனந்த், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பா. விக்னேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.எம். பாலா, மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பா.லெ. சுகதேவ், நிா்வாகிகள் வி. தீனதயாளன், வீ. சந்தோஷ், பி.விஜய், க. இளையராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →