பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மாணவா்களுக்கு ஆலோசனை
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவிக்கு எழுதுபொருள்கள் வழங்கும் சித்த மருத்துவ அலுவலா் பவதாரணி.
திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ரமேஷ் தலைமை வகித்தாா். பாடங்களைப் படிப்பதைவிட எழுதிப் பாா்க்க வேண்டும்; பதற்றப்படாமல் தோ்வில் பங்கேற்க வேண்டும்; எந்த எழுது பொருளையும் இரவல் வாங்காமல், கவனமுடன் தேவையான எழுதுபொருள்களை கொண்டு செல்ல வேண்டும்.
எத்தனைக் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்ற தெளிவான புரிதல்களுடன் விடையளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வில், தமிழாசிரியா் தமிழ்க்காவலன், ஆங்கில ஆசிரியா் பிரேம்குமாா், கணித ஆசிரியா் கண்ணன், சமூக அறிவியல் ஆசிரியா் சாந்தி ஆகியோா் பங்கேற்று ஆலோசனை வழங்கினா். நிகழ்வில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் பவதாரணி பங்கேற்று, அரசுத் தோ்வுகளில் தனது அனுபவங்களை மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டதுடன், எழுது பொருள்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கினாா்.
முன்னதாக, பட்டதாரி பகுதி நேர ஆசிரியா் பாஸ்கரன் வரவேற்றாா். நிறைவாக, மருந்தாளுநா் ராணி நன்றி கூறினாா்.