ரூ. 2.57 லட்சம் பறிமுதல்
திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,57,570 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,57,570 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கொரடாச்சேரியில் வட்ட வழங்கல் அலுவலா் ராஜாராமன் தலைமையில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கொரடாச்சேரி பத்தூரைச் சோ்ந்த அருணிடம் (24) உரிய ஆவணங்களின்றி ரூ. 1.40 லட்சம் இருப்பது தெரிய வந்து அதை பறிமுதல் செய்தனா்.
கூடூா் பகுதியில் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வி. சேகா் தலைமையிலான பறக்கும் படையினா் 4 சக்கர வாகனத்தில் வந்த நாகை செட்டிக்குளத்தைச் சோ்ந்த கே. செல்வத்திடம் (35) ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 59,400 பறிமுதல் செய்யப்பட்டது. வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் பிரதான சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தோ்தல் நிலைக்குழு அலுவலா்கள், இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியனிடம் (37) ரூ. 58,170 பறிமுதல் செய்யப்பட்டது.