புதுதில்லி

தேர்தல் விதிமீறல்: நடவடிக்கை எடுக்க  தில்லி அரசு, மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவு

DIN

தில்லியில் தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி தலைமைச் செயலர், மூன்று மாநகராட்சி ஆணையர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் ஏப்ரல் 22ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தில்லி அரசு செயல்படுத்தி வரும் அரசு திட்டங்களின் பெயர் பலகைகளில் ஆம் ஆத்மி என்று உள்ளதாகவும், இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் அதில் உள்ள ஆம் ஆத்மி பெயரை அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் ஸ்ரீவஸ்தவாவிடம் தில்லி பாஜக தலைவர்கள் கடந்த 20 ஆம் தேதி மனு அளித்தனர்.
இதையடுத்து, தில்லி தலைமைச் செயலர், தில்லி மாநகராட்சிகளின் மூன்று ஆணையர்கள் ஆகியோருக்கு தில்லி தேர்தல் ஆணையம் கடந்த 21ஆம் தேதி கடிதம் அனுப்பி உள்ளது. அதில், "தில்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 14ஆம் தேதி மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆகையால், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விதிமீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தில்லி முழுவதும் சுமார் 150 ஆம் ஆத்மி முஹல்லா கிளினிக்குகளை தில்லி அரசு நடத்தி வருகிறது. அதன் பெயர் பதாகைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஆம் ஆத்மி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஆம் ஆத்மி பைபாஸ் எக்ஸ்பிரஸ் பேருந்து சேவை என்றும் உள்ளது. இது வாக்காளர்களை தங்கள் வசப்படுத்த ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருக்கும். அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி ஆம்புலன்ஸ் திட்டத்தின் பெயரில் சமாஜவாதி என்ற பெயரை மறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்து என்று பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT