போலீஸாரையே மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
தில்லி சாலைகளில் சலான் வழங்கும் போக்குவரத்து போலீஸாரை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து, அவர்களிடமே மிரட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுதில்லிபோலீஸாரையே மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
தில்லி சாலைகளில் சலான் வழங்கும் போக்குவரத்து போலீஸாரை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து, அவர்களிடமே மிரட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லி சாலைகளில் சலான் வழங்கும் போக்குவரத்து போலீஸாரை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து, அவர்களிடமே மிரட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து, ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ள தலைக்கவசம், ரகசிய பொத்தன் கேமரா, சிறிய கேமராக்கள், சிடிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மந்தாவலி பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் ஒருவர் தில்லி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதில், தான் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதைப் போன்ற விடியோ தன்னிடம் உள்ளதாக கூறி ஒருவர் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்ததாக ஷாரூக் அப்பாஸ் (24), ரஞ்ஜீத் மௌரியா (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் காவல் துறை துணை ஆணையர் (கிழக்கு) ஓமிர் சிங் கூறுகையில்,
"அவர்கள் வர்த்தக வாகனங்களை ஒரு வழிப்புற சாலைகள், வாகனங்கள் நிறுத்தக் கூடாத பகுதிகள் ஆகியவற்றில் வேண்டுமென்றே நிறுத்துவார்கள். போக்குவரத்து விதிமீறியதாக போலீஸார்டம் அவர்களிடம் அணுகும்போது, அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு லஞ்சம் கொடுக்க முயல்வார்கள். இந்தக் காட்சிகளை ரகசிய கேமரா மூலம் படமாக்கிவிட்டு, சிறிது நேரம் கழித்து அதே போக்குவரத்து போலீஸாரிடம் அந்த விடியோவை காண்பிப்பார்கள். இந்தக் காட்சிகளை செய்தித் தொலைக்காட்சி, ஊழல் ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு வழங்கி விடுவதாகக் கூறி, போலீஸாரை மிரட்டி பணம் பறிப்பார்கள்.
போக்குவரத்து விதி மீறலுக்கு சலான் வழங்கினாலும், அந்தப்பகுதி விடியோவை அகற்றிவிட்டு, வெறும் அபராதப் பணம் மட்டும் செலுத்தும் விடியோவை குறைந்த வெளிச்சத்தில் எடுத்ததைப்போல் மாற்றி, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸாரிடம் காண்பித்து மிரட்டி பணம் பறித்து வந்ததை அவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். இந்த குற்றச் செயலில் 6 பேர் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது என்றார்.
இந்தக் கும்பல் மாநகராட்சி ஊழியர்களையும் இதேபோல் மிரட்டி பணம் பறித்துள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.