வீட்டின் மேற்கூரை இடிந்து கணவன் - மனைவி பலி
தில்லியின் துவாரகா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலியாகினர்.
தில்லியின் துவாரகா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலியாகினர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துவாரகாவின் ஹரி விஹார் பகுதியில் உள்ள பழமையான வீட்டில் வசித்து வந்தவர் சுனில் (40). இவரது மனைவி ரச்சனா (40). இவர்களுக்கு, வைபவ் (19), குல்ஷான் (16), குன்குன் (9) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில், அந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். பின்னர், அவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் சுனிலும், ரச்சனாவும் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மற்ற மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
சிக்னல் கோளாறு: புளூலைனில் சேவை பாதிப்பு
புது தில்லி, ஜூலை 23: ரஜௌரி கார்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக மெட்ரோ புளூலைன் வழித்தடத்தில் ரயில் சேவைகள் சிறிது நேரத்துக்கு பாதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரஜௌரி கார்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர், 15 நிமிடங்களுக்கு பிறகு ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன' என்றார்.
துவாரகா செக்டர் 21 - நொய்டா சிட்டி சென்டர் இடையேயான புளூலைன் வழித்தடத்தில், கடந்த மார்ச் மாதம் உயர் அழுத்த மின்கம்பிகளில் பழுது ஏற்பட்டது. இதனால் 90 நிமிடங்களுக்கும் மேலாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.