புதுதில்லி

ஆதார் மூலம் சடலங்களை அடையாளம் காண முடியாது: நீதிமன்றத்தில் யுஐடிஏஐ வாதம்

DIN


ஆதார் மூலமாக சடலங்களை அடையாளம் காணுவது தொழில்நுட்பரீதியாக சாத்தியம் இல்லை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான அடையாளம் தெரியாத சடலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட இயலாமல் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், அத்தகைய சடலங்களை ஆதாரின் உதவியுடன் அடையாளம் காண உத்தரவிடக் கோரி அமித் சாஹ்னி என்ற சமூக ஆர்வலர், தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சடலங்களின் கை விரல் ரேகையைப் பதிவு செய்து, அதனை ஆதார் விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், அந்த மனு, நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது யுஐடிஏஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சோகேப் ஹுசைன் வாதிட்டதாவது:
பொதுவாக கை விரல் ரேகை, கண் விழி படலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரது ஆதார் தகவல்களை அடையாளம் காண்பது எளிதல்ல. அதற்கு 5 விரல்களின் ரேகைகளும், முழுமையான விழிப் படலமும் தேவை. சடலங்களிடம் இருந்து பதிவு செய்யப்படும் ஒரே ஒரு விரலின் ரேகையைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காண இயலாது. அது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் அல்ல என்றார் அவர். இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதனைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துக்கு (என்சிஆர்பி) உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT