புதுதில்லி

பயணிகளிடம் திருப்திகர ஆய்வு: தில்லி மெட்ரோவில் இன்று தொடக்கம்

DIN

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சேவைகள் குறித்த பயணிகளின் கருத்தை அறியும் வகையில் ஆறாவது இணையதள ஆய்வை வரும் திங்கள்கிழமை முதல் அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை நடத்த உள்ளது.
இந்த ஆய்வை லண்டனைச் சேர்ந்த ரயில்வே மற்றும் போக்குவரத்து உத்திகள் மையம் (ஆர்டிஎஸ்சி) நடத்த உள்ளது. இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) நிர்வாக இயக்குநர் அனூஜ் தயாள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்த ஆய்வின் நோக்கமானது தில்லி மெட்ரோ ரயில் சேவையின் தரம் மேம்பாடு தொடர்பாக பின்னூட்டங்கள், ஆலோசனைகள் உள்பட மெட்ரோ செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ரயில் பயணிகள் நினைப்பதை அறிவதாகும். 
இந்த ஆய்வில் பங்கேற்கும் ரயில் பயணிகள் w‌w‌w.‌d‌e‌l‌h‌i‌m‌e‌t‌r‌o‌r​a‌i‌l.​c‌o‌m எனும் இணையதள முகவரியில் செல்ல வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்க வேண்டும். அப்போது, ஆய்வு படிவம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் இருக்கும். அவற்றில் ஒட்டுமொத்த திருப்தி, ரயில்வே சேவை, தொடர்பு வசதி, நம்பகத்தன்மை, தகவல் இருப்பு, சேவையின் தரம், உயிர்- உடைமை பாதுகாப்பு, பயணத்திற்கு முந்தைய தகவல், பயணத்தின்போது தகவல், வசதி, கூட்டம், பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய அம்சங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிடலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT