புதுதில்லி

புது தில்லியில் 15 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

DIN


வாகனக் கட்டுப்பாடு திட்டத்தால் தில்லியில் காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளது என்றும் திங்கள்கிழமை தில்லியில் 15 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
தில்லியில் காற்று மாசு அபாய அளவில் உள்ளது.  இந்த மாசுவைத் தடுக்க தில்லி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இதற்கு  தில்லி மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் தில்லியில் சில நாள்களாக காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. 


தில்லியில் 30 லட்சம் கார்கள் பயன்பாட்டில் உள்ளன. தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாடுத் திட்டத்தால் வரும் 15 ஆம் தேதிவரை 15 லட்சம் கார்களே தில்லி சாலைகளில் பயணிக்கும். இது, தில்லியில் காற்று மாசுவை பெருமளவில் குறைக்க உதவும். இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு தில்லி மக்கள் முழு ஆதரவு வழங்குவதாக களத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தில்லியில் டெங்கு நோயின் தாக்கத்தைக் குறைத்ததுபோல, இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் மூலம் தில்லியில் காற்று மாசுவின் அளவையும் தில்லி அரசு குறைத்துவிடும். 


இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது. 
தில்லி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் ரூ.150}200 கோடியை மட்டுமே விளம்பரத்துக்காக செலவு செய்துள்ளது. தில்லியில் வாழும் 2 கோடி மக்கள் இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஆதரிக்கும்போது சில பாஜக தலைவர்கள் இதைக் குழப்பும் வகையில் நடந்து கொள்வது தவறாகும். 
இத்திட்டம் சரியாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக  ஆய்வு செய்வேன். பேருந்து சேவைகள் குறைவாக உள்ள வழித்தடங்களில் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.


காற்று மாசுக்கு அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம்
தில்லி காற்று மாசு பிரச்னைக்கு அதிகாரிகளின் தொடர் அலட்சியப் போக்கே காரணம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தில்லி அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தில்லி காற்று மாசு தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுயமான ஏ.கே. கோயல் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது, இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணைப் பட்டியலில் சேர்க்க தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டு கூறியதாவது:
தில்லியின் காற்று மாசு பிரச்னை இன்றைய ஒருநாளில் ஏற்பட்டது அல்ல. அதிகாரிகளின் தொடர் அலட்சியப் போக்காலும், சட்டத்தை சரியாக அமல்படுத்தாத காரணத்தாலும் ஏற்பட்டதாகும். இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராய வேண்டும்.  இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தீர்ப்பாய அமர்வு கூறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT