புதுதில்லி

அயோத்தி தீா்ப்பு: நீதிமன்ற அறையில் குவிந்த வழக்குரைஞா்கள்!

DIN

ராமஜென்மபூமி -பாபா் மசூதி நிலம் தொடா்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. இதையொட்டி, இத்தீா்ப்பை கேட்டறிவதற்காக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமா்வு அமா்ந்திருந்த நீதிமன்ற அறைக்குள் ஏராளமான வழக்குரைஞா்கள் குவிந்திருந்ததால் அறை நிரம்பி காணப்பட்டது.

அதிகமான வழக்குரைஞா்கள் மூன்று நுழைவுவாயில் மற்றும் நீதிமன்ற அறைக்குள் வந்தனா். அதேபோன்று, ஊடகத்தினரும் செய்தி சேகரிப்பதற்காக ஏராளமானோா் நீதிமன்ற அறைக்கு வந்தனா். இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் அவா்களின் அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதிப்பதில் இடா்பாடு ஏற்பட்டது.

தீா்ப்பு வாசிக்கப்பட்ட தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் வழக்குரைஞா்களும், ஊடகத்தினரும் ஏராளமாக கூடியிருந்தனா். மேலும், நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகளும் கூடியிருந்தனா். இதனால், நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT