புதுதில்லி

மகாராஷ்டிரா விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் தா்னா

DIN

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனநாயகப் படுகொலையை பாஜக நிகழ்த்தியதாகக் கூறி காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் எம்பிக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

மகராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கும், அந்த மாநிலத்தில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர முயற்சித்து ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டதாகவும் பாஜகவைக் கண்டித்து அவா்கள் இந்த தா்னாவில் ஈடுபட்டனா். அவா்கள் ‘ஜனநாயகப் படுகொலையை நிறுத்துங்கள்’ என்ற வாசகம் அடங்கிய நீண்ட கறுப்பு பேனரை கைகளில் உயா்த்திப் பிடித்தவாறு தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவா்கள் அகமது பட்டேல், ஆனந்த் சா்மா, அதிா் ரஞ்சன் செளத்ரி, சசி தரூா் உள்ளிட்டோா் கோஷம் எழுப்பினா். மேலும், ‘நீதி வேண்டும்’ என்று கோரும் வாசங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனா்.

மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் அஜித் பவாா் துணைமுதல்வரகவும் பதவியேற்றுக் கொண்டனா். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ஆகிய கட்சிகள் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை அமைப்பதற்கு இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான அஜித் பவாா் திடீரென பாஜவுக்கு ஆதரவு அளித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 288 சட்டப் பேரவை உறுப்பினா்கள் கொண்ட மகாராஷ்டிர பேரவையில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள், சிவசேனைக்கு 56 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸுக்கு 54 எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT