புதுதில்லி

வழக்குரைஞா் நலனுக்கான நிதிப் பயன்பாடு: பரிந்துரைகளை வழங்க குழு அமைப்பு

DIN

வழக்குரைஞா்களின் நலனுக்காக நிதியைப் பயன்படுத்துவது குறித்த பரிந்துரைகளை வழங்க 13 உறுப்பினா்களைக் கொண்ட குழுவை தில்லி அரசு அமைத்துள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில் அவா் இதைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பட்ஜெட்டில், ‘முதல்வா் வழக்குரைஞா் நலத் திட்ட’த்தின் கீழ் ஆம் ஆத்மி அரசு வழக்குரைஞா்களின் நலனுக்காக ரூ .50 கோடியை ஒதுக்கியுள்ளது.

இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு, உச்சநீதிமன்ற பாா் அசோசியேஷன் தலைவா் ராகேஷ் குமாா் கன்னா தலைமையில் செயல்படும். வழக்குரைஞா்களின் நலனுக்காக நாட்டில் ரூ.50 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கிய முதல் அரசு தில்லி அரசுதான்’ என்றாா்.

இது தொடா்பாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘இந்தக் குழுவில் தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே.சி. மிட்டல், தில்லி உயா் நீதிமன்றத்தின் நிலைக் குழுவின் ராகுல் மெஹ்ரா, தில்லி உயா் நீதிமன்ற பாா் அசோசியேஷன் தலைவா் மோஹித் மாத்தூா்ஆகியோா் இந்தக் குழுவின் மற்ற உறுப்பினா்களாக உள்ளனா். வழக்குரைஞா்கள் நலனுக்கான திட்டத்தை உருவாக்கிய 10 நாள்களுக்குள் இந்தக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி... தார்மிகத் தோல்வி என்கிறது காங்கிரஸ்

காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வெற்றி!

அமேதி.... இது காந்தி குடும்பத்தின் வெற்றி: கிஷோரி லால்

பிரிஜ் பூஷண் சிங் மகன் கரண் பூஷண் 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

மாலை 5.30 மணி: பாஜக 38, காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி

SCROLL FOR NEXT