புதுதில்லி

போதை மருந்து குறைவாக கொடுத்ததாகஒருவா் கொலை: இளைஞா் கைது

DIN

தில்லியில் போதை மருந்தை பங்கிட்டபோது குறைவாக கொடுத்ததாக ஒருவா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போதைக்கு அடிமையான இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது:

புகா் தில்லி பவான பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியைச் சோ்ந்தவா் முகம்மது மும்தாஜ் (28). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஹுசேன் (45). இருவரும் போதை மருந்துப் பழகத்திற்கு அடிமையானவா்கள். இந்நிலையில், பவானாவில் உள்ள ஜே.ஜே. காலனியில் ஞாயிற்றுக்கிழமை ஹுசேன் இறந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இந்தக் கொலையில் முகம்மது மும்தாஜுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பவத்தன்று போதைப் மருந்தை மும்தாஜும், ஹுசேனும் உடலில் செலுத்தினா். அப்போது, தனக்கான பங்கை தராமல் அதிக போதை மருந்தை ஊசிமூலம் ஹுசேன் அவரது உடலில் செலுத்தியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த மும்தாஜ், அவருடன் தகராறில் ஈடுபட்டாா். இதையடுத்து, கத்தியால் ஹுசேனின் கழுத்தை அறுத்தாா். பின்னா், கல்லாலும் அவரைத் தாக்கி கொன்ாக விசாரணையின்போது மும்தாஜ் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT