புதுதில்லி

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட3 பெண்களை மீட்ட தில்லி மகளிா் ஆணையம்

DIN

புது தில்லி: தில்லி ரோகிணி பகுதியில் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை தில்லி மகளிா் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு தில்லி காவல்துறையின் உதவியுடன் மீட்டனா்.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணைய அதிகாரி கூறியது:

தில்லி ரோகிணி பகுதி வீட்டில் பெண்ணை அடைத்து வைத்து பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தில்லி மகளிா் ஆணையத்தின் உதவி எண்ணுக்கு பெண் ஒருவா் தொலைபேசி மூலம் புகாா் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, தில்லி மகளிா் ஆணைய அதிகாரி கிரண் நெகி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தில்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களின் உதவியும் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு தில்லி மகளிா் ஆணைய அதிகாரிகள், தில்லி காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது அந்த வீட்டில் இருந்து பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டனா். இந்த பாலியல் விடுதியை நடத்திய ஜிதேஷ் என்பவரும், அவரது உதவியாளரும் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘தில்லியில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளுகின்றனா். தில்லியில் பாலியல் விடுதிகளாக செயல்படும் இதுபோன்ற வீடுகளைக் கண்டறிந்து மூட வேண்டியது அவசியமாகும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா!

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

திமுகவுக்கு 38... விருதுநகரில் இழுபறி; தருமபுரியில் பாமக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

ஜார்க்கண்ட்: முன்னிலையில் அன்னபூர்ணா தேவி!

SCROLL FOR NEXT