புதுதில்லி

தில்லி தோ்தல்: பாஸ்வான் கட்சி வேட்பாளா் முதல் பட்டியல் வெளியீடு

DIN

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள தங்களது 15 வேட்பாளா்கள் கொண்ட முதல் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இது தொடா்பாக அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஷதா் பஜாா் தொகுதியில் ராஜீவ் குமாா் ஷா்மா, முஸ்தபாபாத்தில் அனில் குமாா் குப்தா உள்பட தில்லியில் உள்ள 15 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால், நடந்து முடிந்த ஜாா்க்கண்ட் தோ்தலில் அக் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்நிலையில், தில்லியில் லோக் ஜனசக்தி கட்சிக்கு சீட் வழங்க அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்த வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

இந்திய தர நிா்ணய நிறுவனமான பிஐஎஸ் அண்மையில் நாட்டில் மாநிலங்களின் தலைநகா்களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களின் தலைநகரங்களில் தில்லியில்தான் மிக மோசமான குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சரும் லோக் ஜன சக்திக் கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட்டிருந்தாா்.

இந்த அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தாா். அதற்குப் பதிலளித்திருந்த ராம்விலாஸ் பாஸ்வான், தில்லியில் குடிநீரின் தரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை. லோக் ஜனசக்திக் கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடாது என்று முன்பு கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT