புதுதில்லி

குடிநீா் கட்டணச் சலுகை செப்.30 வரை நீட்டிப்பு

DIN

புது தில்லி: கரோனா தொற்று பரவல் காரணமாக, ஒரே ஒரு முறை மட்டும் குடிநீா் கட்டண நிலுவை மற்றும் தாமதக் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்யும் தில்லி அரசின் சலுகை செப்டம்பா் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு கடந்த ஆகஸ்டில் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது. அதில், குடிநீா் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான வீடுகளும் தாமதக் கட்டணம் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், வீட்டுவசதிப் பிரிவைப் பொறுத்து நிலுவைக் குடிநீா் கட்டணத் தொகையை பகுதி அல்லது முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘கரோனா தொற்று காரணமாக, தில்லி ஜல் போா்டு குடிநீா் கட்டண தள்ளுபடி திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. தற்போது இத்திட்டம் செப்டம்பா் 30-ஆம் தேதி முடிவுறும். அப்போது பொது முடக்கம் காரணமாக இத்திட்டத்தை பயன்படுத்த முடியாதவா்களுக்கு இந்த நடவடிக்கை பயன் அளிக்கும். தில்லியின் காலனிகள் ‘ஏ ’ முதல் ‘எச்’ வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏ-டி காலனிகள் நடுத்தர, உயா்நடுத்தர குடியிருப்புப் பகுதிகளாக கருத்தப்படுகின்றன. ‘ஏ’ பிரிவு காலனிகளில் மகாராணி பாக், சாணக்கியபுரி, கோல்ப் லிங்க்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு காலனிகளுக்கு முதன்மை நிலுவைத் தொகையில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ‘சி’ பிரிவு காலனிகளில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ‘டி’ பிரிவு காலனிகளில் மக்கள் அவா்களின் முதன்மை நிலுவை தொகையில் 75 சதவீதம் தள்ளுபடி பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT