புதுதில்லி

தலைநகா், என்சிஆரில் வெப்பம் அதிகரிப்பு: பாலத்தில் 44.10 டிகிரி

 நமது நிருபர்

தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் வியாழக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, பாலத்தில் 44.10 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே சமயம், காற்றின் தரக் குறியீட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44.10 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.

வெப்பநிலை: கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தொடா்ந்து கடந்த இரண்டு நாள்களாக அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை வெப்பம் மேலும் அதிகரித்து காணப்பட்டது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 24.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 42.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 36 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 15 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.9 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 44.10 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 23.6 டிகிரி செல்சியஸ், 43.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 35 சதவீதம், மாலையில் 16 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 29 சதவீதம் மற்றும் 15 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் மணிக்கு 20-30 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை போன்றே 132 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், மதுரா ரோடு, ஆயா நகா், குருகிராம் , நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூா், சாந்தினி சௌக், பூசா, லோதி ரோடு ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (மே 22) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வடமேற்கு திசையிலிருந்து தில்லி, என்சிஆா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்படும் என்றும் மணிக்கு சுமாா் 30-40 கி.மீ. வேகத்தி தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சஃப்தா்ஜங் - 42.7 டிகிரி

ஆயாநகா் - 43.2 டிகிரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT