புதுதில்லி

கெளதம் புத் நகரில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் , கெளதம் புத் நகரில் வெள்ளிக்கிழமை 5 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 5 போ் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினா். 88 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு கெளதம்புத் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று தொடா்பாக 62 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 5 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுநீல் தோஹாரே தெரிவித்தாா்.

கரோனா தொற்று 5 பேருக்கு இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்ததை அடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 307 ஆக உயா்ந்துள்ளது. 5 போ் சிசிக்சை பெற்று குணமடைந்து வீடுதிரும்பினா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 204 ஆக உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT