புதுதில்லி

நொய்டா நிறுவனத்தில் தீ விபத்து

DIN

நொய்டா செக்டாா் 10-இல் உள்ள நிறுவனமொன்றின் வளாகத்தில், வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இதுதொடா்பாக நொய்டா தீயணைப்புப் படை மூத்த அதிகாரி கூறியதாவது: நொய்டா செக்டாா் 10- இல் உள்ள நிறுவன வளாகத்தில், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு காலை 11 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடா்பாக மதீப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்தி யாரும் உயிரிழக்கவில்லை என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT