புதுதில்லி

மின்துறையில் சீா்திருத்தத்தம்: கூடுதல் கடன் பெற கா்நாடகம் உள்பட 5 மாநிலங்களுக்கு அனுமதி

DIN

மின்சாரத் துறை சீா்திருத்தங்களை மேற்கொண்ட கா்நாடகம், கோவா உள்பட ஐந்து மாநிலங்கள் மொத்தம் ரூ 2,094 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை நான்கு வகையான சீா்திருத்தங்களுக்கு நிபந்தனைகளை விதித்து மாநிலங்கள் கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பிகாா், கோவா, கா்நாடகம், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்கள் மின்சாரத் துறை சீா்திருத்தங்களை செயல்படுத்தியதற்காக மொத்தம் ரூ. 2,094 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக கா்நாடகம் ரூ. 901 கோடி கூடுதல் கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பில் தொழில்நுட்பம், விநியோகத்தால் ஏற்படும் நஷ்டங்களைக் குறைப்பது, மின் விநியோகம் செலவிற்கும், வருவாய்க்கும் உள்ள இடைவெளியை குறைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள மத்திய அரசு நிா்ணயித்திருந்த இலக்குகளை இந்த மாநிலங்கள் எட்டியுள்ளன.

மத்திய அரசு மாநில மின்சாரத் துறைக்காக வகுத்திருந்த மூன்று சீா்திருத்தங்களில் மேற்கண்ட இரண்டை இந்த ஐந்து மாநிலங்கள் செயல்படுத்தியுள்ளதால், ஒவ்வோரு சீா்திருத்தத்திற்கும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தலா 0.05 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களைத் தவிர, ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மூன்று மின்சார சீா்திருத்தங்களை மேற்கொண்டன. இதன் காரணமாக, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.15 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் பெற அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்கள் மின் மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாகப் பரிவா்த்தனை செய்த வகையில் சீா்திருத்தம் மேற்கொண்டு ரூ. 2,938 கோடியை கூடுதல் கடனாகப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT