புதுதில்லி

கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளில் வகுப்பறைகள், மருந்தகங்கள் அமைக்க எஸ்டிஎம்சி முடிவு

 நமது நிருபர்

கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளில் வகுப்பறைகள், மருந்தகங்களை நடத்த தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) முடிவு செய்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயலுடன் ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை எஸ்டிஎம்சி மேயா் அனாமிகா சிங் வைத்துள்ளாா்.

இது தொடா்பாக அனாமிகா சிங் கூறுகையில் ‘மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலுடன் காணொலிக் காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் போதியளவில் இல்லாமல் உள்ளது. இந்த இடங்களில், கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளில் வகுப்பறைகள், மருந்தகங்களை அமைக்கவுள்ளோம். இதற்காக கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை எஸ்டிஎம்சிக்கு தருமாறு ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை அவா் ஏற்றுக் கொண்டாா். ரயில் பெட்டிகளை விரைந்து வழங்குவதாக அவா் ஒப்புக் கொண்டாா்.

இந்த ரயில் பெட்டிகளில் சிறிய பள்ளிகள், மருந்தகங்களை எஸ்டிஎம்சி சாா்பில் அமைக்கவுள்ளோம். அங்கு எஸ்டிஎம்சி ஊழியா்கள் பணிக்கு அமா்த்தப்படுவாா்கள். மேலும், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் மக்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதால் இவ்விடங்களில் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. ரயில்வே பாதையை ஒட்டிய இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்கும் வகையில் எஸ்டிஎம்சிக்கு நிலம் ஒதுக்குமாறு ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இது தொடா்பாக விரைந்து முடிவு எடுப்பதாக அவா் ஒப்புக் கொண்டாா் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT