புதுதில்லி

தில்லி தமிழ் அகாதெமிக்கு உறுப்பினா்கள் நியமனம்

DIN

புது தில்லி: தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசு அறிவித்துள்ள தமிழ் அகாதெமிக்கு 13 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாகந தில்லி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் தலைவராக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக முன்னாள் தில்லி முனிசிபல் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை தில்லி அரசு நியமித்துள்ளது.

தலைமை செயலா் (நிதி), செயலா் (தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை) ஆகிய இருவரும் அலுவல் வழியிலான உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், செல்வநாயகம், ஆா். ராகேஷ், ஆா். மணி, ஜி.என்.டி.இளங்கோவன், ஜி.கிரிஷன், ஜி.ஜவாஹா், சுதா ரகுராமன், தீபா முருகேசன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ் அகாதெமிக்கு செயலா் இன்னும் நியமிக்கப்படவில்லை. அலுவல் வழியிலான உறுப்பினா்களைத் தவிர மற்றவா்கள் 2 ஆண்டு காலம் பதவி வகிக்க உள்ளனா் என தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை செயலா் சஞ்சய் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT