புதுதில்லி

தில்லியில் தொடர் மழை: பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மும்பை, தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.

தில்லியில் பருவ மழை தாமதமாக தொடங்கிய நிலையில் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், தில்லியில் உள்ள முக்கிய சாலைகள், புறநகரான குருகிராம், நொய்டா, காசியாபாதில் உள்ள தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால், பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், மகாராஷ்டிரத்தின் மும்பை, நவிமும்பை, தாணே, பால்கர் உள்ளிட்ட நகரங்களிலும் பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்த என்ஐஏ! 3 பேர் மருத்துவர்கள்!

நவ.27ல் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

சென்னையை தாக்குமா சென்யார் புயல்? புதிய தகவல்!

கிரிக்கெட் வாரியத்துடன் கருத்து வேறுபாடு.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ராஜிநாமா!

ஆடி பிரியர்களுக்கு.. க்யூ3, க்யூ5 புதிய எடிஷன் அறிமுகம்!

SCROLL FOR NEXT