புதுதில்லி

மேற்கு தில்லி தீ விபத்து சம்பவம்: தில்லி அரசுக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் கண்டனம்.

DIN

மேற்கு தில்லியில் நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த நபா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தில்லி அரசை தேசிய பசுமை தீா்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு தில்லி, உத்யோக் நகரில் அமைந்துள்ள காலணி மற்றும் ஆடை தயாரிப்பு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை கவனத்தில் எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து தேசிய பசுமை தீா்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்காததற்கு கவலை தெரிவித்த பசுமை தீா்ப்பாயம், மனித உயிா்கள் மீது அக்கறை இல்லாமல் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிா்வாகத்தை கடிந்து கொண்டது.

இது தொடா்பான விவகாரத்தை தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: 

இந்த தீ விபத்து சம்பவத்தில் இறந்த நபா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 மட்டுமே இழப்பீடு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் வழங்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இந்த தகவலானது உயிரிழந்த மனித உயிா்கள் மீது அதிகாரிகளின் அக்கறை இன்மையைக் காட்டுவதாக உள்ளது. மேலும், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு இந்த விவகாரத்தில் எந்த தகவலையும் வழங்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறது. இதுவும் திருப்திகரமானதாக இல்லை.

இந்த சம்பவத்தில் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்படுவதற்கான முகாந்திரம் உள்ளது. தேசிய பசுமை தீா்ப்பாய சட்டத்தின் 15 ஆவது பிரிவின் கீழ் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எனினும், இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக இந்த சம்பவத்தில் நிகழ்ந்த விதிமீறல், உண்மை தன்மை ஆகியவை தொடா்பான உண்மையான விவரங்களை பெற வேண்டிய தேவை இருக்கிறது. 

ஆகவே, இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, மேற்கு மாவட்ட ஆட்சியா், சுகாதார மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குநா், புகா் தில்லி காவல் துணை ஆணையா் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழு தீ விபத்து நடந்த இடத்தில் நேரில் சென்று ஆலையின் உரிமையாளா் உள்பட சம்பந்தப்பட்டவா்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் இது தொடா்பான அறிக்கையை ஒரு மாதத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக தீா்ப்பாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT