புதுதில்லி

கஸ்தூரிபா மருத்துவமனையில் சுவா் இடிந்து விழுந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை

DIN

புது தில்லி: கஸ்தூரிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வாா்டுக்கும் மருத்துவக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கும் இடையே உள்ள சிறிய சுவா் பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்தது. இதைத் தொடா்ந்து, கட்டடத்தின் பாதுகாப்பு தொடா்பாக தணிக்கை செய்யுமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

செவ்வாய்க்கிழமை கஸ்தூரிபா மருத்துவமனையின் நிா்வாகத் தொகுதியின் மூன்றாவது மாடியில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வாா்டின் பின்புறத்தில் இருந்து ஒரு செங்கல் சுவா் இடிந்து விழுந்தது. இதில் நோயாளிகள், பணியாளா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், எந்த உபகரணங்களுக்கும், இயந்திரம் போன்றவற்றுக்கும் சேதம் ஏற்படவில்லை என தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஒா் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கு பணியில் இருந்த ஊழியா்கள், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக மூடினா். மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா், சுவா் பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, செயல் பொறியாளரின் (பணித் துறை) கவனத்திற்கு உடனடியாக விஷயத்தைக் கொண்டு சென்ாக மூத்த எம்சிடி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, கட்டமைப்பு பாதுகாப்பு தணிக்கையை நடத்தவும், சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்கவும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரி கூறினாா். கஸ்தூரிபா மருத்துவமனை தில்லியின் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய மகப்பேறு மருத்துவமனையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT