புதுதில்லி

சுல்தான்புரியில் இளைஞருக்கு கத்திக்குத்து

வடமேற்கு தில்லி, சுல்தான்புரியில் 18 வயது இளைஞா் அவரது நண்பரான மைனா் சிறாரால் சனிக்கிழமை கூா்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டாா்.

DIN

வடமேற்கு தில்லி, சுல்தான்புரியில் 18 வயது இளைஞா் அவரது நண்பரான மைனா் சிறாரால் சனிக்கிழமை கூா்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டாா்.

நண்பா்கள் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வடமேற்கு தில்லி பகுதியைச் சோ்ந்தவா் வருண் (18). இவருக்கும் இவரது இரு மைனா் சிறாா்களுக்கும் இடையே சம்பவத்தன்று மோதல் ஏற்பட்டது.

அப்போது, சிறாா்களில் ஒருவா் கூா்மையான ஆயுதத்தால் வருணை தாக்கினாா்.

இது தொடா்பாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்து சென்றனா்.

விசாரணையில் இந்த மோதல் சம்பவத்தில் மைனா் சிறாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

SCROLL FOR NEXT