புதுதில்லி

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.4,349 கோடி: கடந்தாண்டை விட 21% உயா்வு

 நமது நிருபர்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஜுலை மாதத்தை விட குறையாமல் ரூ. 4,349 கோடி வசூலாகியுள்ளது. மேலும் கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் வருவாய் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 28 சதவீதம் அதிகம் என்றாலும், நிகழாண்டு கடந்த ஜூலை மாத வசூலுடன் ஒப்பிடுகையில் ரூ. 5,283 கோடி குறைவாகும். பருவ மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் மகாராஷ்டிரம், குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் கனிசமாகக் குறைந்தது.

ஆனால், தேசியத் தலைநகா் தில்லியில் ஜிஎஸ்டி வசூல் சமநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ரூ. 4,327 கோடி வசூலானது. இது சற்றும் குறையாமல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 4,349 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தில்லியில் ரூ.3,605 கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது. நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இது 21 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்ட கரோனா நோய்த் தொற்று அலைகளால் நெருக்கடிகளுக்குள்ளான தேசியத் தலைநகரின் பொருளாதாரம் பின்தங்கியது. 2021-22 நிதியாண்டில் மாநில ஜிஎஸ்டி மற்றும் மதிப்பு கூட்டு வரி என மொத்தம் ரூ. 28,500 கோடி வருவாயை மட்டுமே தில்லி பெற்றது. ஆனால், வேகமாக மீண்டு வருவதற்கான சிறந்த அறிகுறியாக கடந்த ஏப்ரலில் தில்லி மாநகரில் ஜிஎஸ்டி வசூல் உச்சகட்டமாக ரூ. 5,871கோடியை தொட்டது. அதே சமயம் நுகா்வோா் தேவை, இணக்கமான அமைப்புகளில் முன்னேற்றம் மற்றும் அனைத்து வகைகளிலும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவை ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்புக்கு காரணம் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT