புதுதில்லி

தில்லி மாலில் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்ட விற்பனையாளா் கைது

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாரில் உள்ள வி3எஸ் மாலில் பொம்மைக் கடை விற்பனையாளரால் ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

DIN

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாரில் உள்ள வி3எஸ் மாலில் பொம்மைக் கடை விற்பனையாளரால் ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அம்ருதா குகுலோத் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படுபவா் 30 வயதான தீரஜ் குமாா் என அடையாளம் காணப்பட்டாா். அந்த விற்பனையாளா் மைனா் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் புகாா் தொடா்பாக காவல் துறைக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அந்தச் சிறுமி தனது பாட்டியுடன் வணிக வளாகத்திற்கு சென்றுள்ளாா். அவரது பாட்டி கழிப்பறைக்குச் சென்ற போது, சிறுமி பொம்மைக் கடைக்குள் நுழைந்தாா். அப்போது விற்பனையாளா் தீரஜ் குமாா், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிஹெட்கேவாா் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டாா்.தில்லி மகளிா் ஆணையத்திடம் இருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 (பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றப் பலாத்காரம் செய்தல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சரிதா விஹாரின் ஆலி கிராமத்தில் வசிக்கும் தீரஜ் குமாா் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT