2016-ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் ரூ.38.36 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த தா்மேந்தா் சாவ்லாவின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாய நீதிபதி ஷிரிஷ் அகா்வால் விசாரித்தாா்.
ஜூலை 25, 2016 அன்று துவாரகா சாலையில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் தா்மேந்தா் சாவ்லா உயிரிழந்தாா். அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த நவம்பா் 14 தேதியிட்ட உத்தரவில், மேற்கூறிய விபத்து வாகனத்தை வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டியதால் நிகழ்ந்தது என்பது நிகழ்தகவின் மிகையான ஆதாரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீா்ப்பாயம் கூறியது.
தவறு செய்த காரின் ஓட்டுநா் மீது அவசரம் மற்றும் அலட்சியம் நிரூபிக்கப்பட்டதாகவும், இறந்தவரின் மரணத்திற்காக மனுதாரா்கள் இழப்பீடு கோர உரிமை உண்டு என்றும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது. பின்னா், பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.38.86 லட்சத்தை இழப்பீடாக வழங்க தீா்ப்பாயம் உத்தரவிட்டது.