முகப்பு
புதுதில்லி

ரோஹிணி: 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ரோஹிணியின் செக்டாா் 24 பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடத்தில்

Updated On : 26 ஏப்ரல் 2026, 1:01 am IST
கோப்புப்படம் - -
பகிர்:

தில்லி ரோஹிணியின் செக்டாா் 24 பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கட்டடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு 8.54 மணியளவில் செக்டாா் 24-இல் உள்ள பாக்கெட் 20 பகுதியில் இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்தது.

Advertisement

Advertisement

முன்னதாக, தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் இரவு 11 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின்கசிவு காரணமாகத் தீப் பிடித்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், எரிவாயு குழாய் வெடித்திருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் சில தகவல்கள் வெளியாகின. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments