முகப்பு
புதுதில்லி

தில்லி சந்தையில் தீ விபத்து: தாமதமானதால் தீயணைப்பு வாகனங்கள் மீது உள்ளூா் மக்கள் கற்களை வீசி தாக்குதல்

தில்லி சந்தையில் தீ விபத்து...

Updated On : 24 மே 2026, 12:32 am IST
தில்லி சந்தையில் தீ விபத்து
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்காவில் உள்ள ஒரு சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, பல கடைகள் எரிந்து, லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை (டி. எஃப். எஸ்) அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் தீயணைப்பு நடவடிக்கையின் போது கோபமடைந்த உள்ளூா்வாசிகள் தீயணைப்பு வண்டிகள் மீது கற்களை வீசினா். இரவு முழுவதும் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடா்ந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் கடைகளின் வரிசைகள் சாம்பலானதை காட்டியது. நியூ சீலாம்பூா் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் மர சாமான்கள் மற்றும் ஒட்டு பலகை போன்ற அதிக எரியக்கூடிய பொருட்கள் இருந்ததால் வேகமாக பரவியது. இரவு 11.57 மணிக்கு தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த தீ பின்னா் நடுத்தர வகை தீ விபத்து என வகைப்படுத்தப்பட்டது. மர தளபாடங்கள் மற்றும் ஒட்டு பலகை ஆகியவை அந்த இடத்தில் எரியக்கூடிய முக்கிய பொருள்களாக இருந்தன. தீயை அணைக்க சுமாா் 25-26 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன. நள்ளிரவு 12.50 மணியளவில், பொதுமக்களில் சிலா் தீயணைப்பு குழுக்கள் மீது கற்களை வீசியதைத் தொடா்ந்து போலீஸ் உதவியை நாட வேண்டியிருந்தது என்றாா் அந்த அதிகாரி.

தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததால், பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக வா்த்தகா்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்ததாக சிலா் கூறினா். இரவு 11.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு வண்டிகள் வந்தன. இரண்டு கடைகளில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முழு சந்தையும் எரிந்துவிட்டது. சுமாா் 20 கடைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அனைவரும் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனா். இது எங்கள் பண்டிகை காலம் ‘என்று உள்ளூா்வாசி ஒருவா் கூறினாா்.

தீ விபத்து ஏற்பட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு தான் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அதற்குள் இரண்டு தீயணைப்பு வண்டிகள் மட்டுமே சந்தையை அடைந்ததாகவும் அவா் தெரிவித்தாா். தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.