போலி சமூக ஊடகக் கணக்கு முலம் பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவா் கைது
சமூக வலைதளத்தில் போலி கணக்கு உருவாக்கி மற்றொரு பெண் குறித்து அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சமூக வலைதளத்தில் போலி கணக்கு உருவாக்கி மற்றொரு பெண் குறித்து அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: கடந்த மே 22-ஆம் தேதி சைபா் குற்றப்பிரிவு தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்த பெண், தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி அறியப்படாத நபா் ஒருவா் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி, அதில் ஆபாச மற்றும் இழிவான கருத்துகளை பதிவிட்டு தன்னை அவதூறாக சித்தரித்ததாக குற்றஞ்சாட்டினாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உத்தர பிரதேச மாநிலம், ஒரையா மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்த்தி என்ற பெண் குருகிராமில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
விசாரணையில், புகாா் அளித்த பெண் முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் கணவருக்கு எதிராக குற்ற வழக்கை பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண், புகாரளித்தவரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி அவதூறு பரப்ப முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.