முகப்பு
திருநெல்வேலி

பணியாளர்கள் பற்றாக்குறை:​ பத்திரப் பதிவில் தேக்கம்

அம்பாசமுத்திரம், மே. 10: தென் மாவட்டங்களில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பத்திரப் பதிவு பணிகள் தேக்கமடைந்துள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:51 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், மே. 10: தென் மாவட்டங்களில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பத்திரப் பதிவு பணிகள் தேக்கமடைந்துள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்

மாவட்டங்களில் 65 சதவிகித பணியிடங்கள் காலியாக இருப்பதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசுத்துறைகளில், பத்திரப் பதிவுத்துறை முக்கியத் துறையாகும். இத் துறையில் பத்திரம் பதிவு செய்தல், பத்திரம் நகல் எடுத்தல், சொத்து தொடர்பான வில்லங்கம் பார்த்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இது தவிர 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பிறப்பு, இறப்பு பதிவு சான்றுகள் சார்பதிவகங்களில் இருந்துதான் பொதுமக்கள் பெற வேண்டும்.

எனவே, பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அரசுக்கு வருவாய் தருகிற துறையில், பத்திரப் பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சார்பதிவகங்களில் காலியிடங்கள் பெருமளவில் நிரப்பப்படாமல் உள்ளன. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சார் பதிவாளர், எழுத்தர், உதவியாளர், கணினி பணியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் என 6 பணியிடங்கள் உள்ளன.

ஆனால், பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் சார் பதிவாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. இப் பணியை எழுத்தர், உதவியாளர்கள்தான் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகின்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் 65 சதவிகிதப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப் பதிவுத்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஓய்வுபெற்ற பணியாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக தற்போது பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கடையம் ஆகிய 8 சார்பதிவகங்கள் உள்ளன. இந்த 8 சார்பதிவகங்களில் சார்பதிவாளர், எழுத்தர், உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் என 78 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது 28 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

மேற்கண்ட சார்பதிவகங்களில் சார்பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது. உதவியாளர்தான், சார்பதிவாளர் பணியை கூடுதலாக கவனித்து வருகிறார். சார்பதிவாளர் அலுவலகங்களில் கணினி பணியாளர் ஒருவர் தாற்காலிகப் பணியில் உள்ளார். அவர்களுக்கு தினம் ரூ. 200 வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. இச் சம்பளத்தை அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் உள்ள பொறுப்பு சார்பதிவாளர்தான் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பத்திரப் பதிவு செய்வது, வில்லங்கச் சான்று பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

காலி மனை பத்திரம் பதிவு செய்தால், ஒரு சில தினங்களில் பத்திரங்கள் வாபஸ் வழங்கப்படுகிறது. கட்டடம் பதிவு செய்தால், அக்கட்டடத்தை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் சொத்து உள்ள இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அரசு வழிகாட்டுதலின்படி முத்திரைத் தாள், பதிவு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து பின்னர் அப் பத்திரத்தை வாபஸ் வழங்க வேண்டும்.

பணியாளர் பற்றாக்குறையினால் சார்பதிவாளர் கள ஆய்வு மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு பல முறை அலைய வேண்டிய நிலை உள்ளது. அரசுக்கு வருமானம் தரக்கூடிய பத்திரப் பதிவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கணினிப்

பணியாளர்கள்

விடுவிப்பு

சார் பதிவகங்கள், பதிவு மாவட்ட அலுவலகங்களில் தினக் கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் கணினி பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சார்பதிவாளர் பொறுப்பில் உள்ள பணியாளரே கணினியை இயக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனால், பத்திரப் பதிவு துறையில் பணிகள் மேலும் தேக்கமடையும்.

அரசு இயந்திரம் சரியாக இயங்கினால் மட்டுமே பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

மாறாக அரசுத்துறை, அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால்

ஊழலுக்கு வழி வகுக்கும் நிலை உருவாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →