ஆட்டோ மோதி காயமடைந்த திமுக பிரமுகர் சாவு
ஆறுமுகனேரி,ஜன.8:திருச்செந்தூரில் ஆட்டோ மோதியதில் காயமடைந்த திமுக பிரமுகர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். திருச்செந்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் சுப்பிரமணியன் (65). இவரும் அதே ப
ஆறுமுகனேரி,ஜன.8:திருச்செந்தூரில் ஆட்டோ மோதியதில் காயமடைந்த திமுக பிரமுகர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
திருச்செந்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் சுப்பிரமணியன் (65). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணி மற்றும் குமரகுருபரன் ஆகிய மூவரும் அதிகாலை வேளையில் பரமன்குறிச்சி சாலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம்.இம்மாதம் 2-ம் தேதி நடைப்பயிற்சி சென்ற இவர்கள் மீது ஆட்டோ மோதியது. இதில் மூவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
திருச்செந்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் துரையை (25) கைது செய்தார். ஆறுமுகனேரி ஆய்வாளர் பார்த்தீபன் விசாரணை செய்து
வருகிறார்.