இலவச வேட்டி, சேலை வழங்குவதில் கெடுபிடி
களியக்காவிளை, ஜன. 8:குளப்புறம் கிராம அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதில் அங்கிருந்த பணியாளர்கள் அதிகக் கெடுபிடி காட்டியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். செம்மான்விளைய
களியக்காவிளை, ஜன. 8:குளப்புறம் கிராம அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதில் அங்கிருந்த பணியாளர்கள் அதிகக் கெடுபிடி காட்டியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
செம்மான்விளையில் உள்ள இக் கிராம அலுவலகத்தில், சனிக்கிழமை அதங்கோடு கேவிடிசிஎம்எஸ் நியாயவிலைக் கடைக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி நடைபெற்றது.
இங்கு அதங்கோடு, கொக்குடிவிளை, மடிச்சல் உள்ளிட்ட 5 கி.மீ. தொலைவிலுள்ள மக்கள் இலவச வேட்டி, சேலைகள் வாங்க வந்திருந்தனர்.
பள்ளி விடுமுறை நாளென்பதால், 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் உறவினர்களுடன் வந்தனர்.
சிறுவர்களுக்கு கையெழுத்திடத் தெரியாது எனக் கூறி அவர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்க அங்கிருந்த பணியாளர்கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து, இச் சிறுவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கும், சிறுவர்கள் கொண்டுவந்த குடும்ப அட்டைகளுக்கும் என இரு கையெழுத்துகள் போட்டு இலவச வேட்டி, சேலைகளை வாங்கிச் சென்றனர்.