முகப்பு
திருநெல்வேலி

"108 ஆம்புலன்ஸ் சேவையால் 10949 அவசரகால மருத்துவ உதவிகள்'

நாகர்கோவில், ஜன.8:கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இதுவரை 10949 அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதன் செயல் அலுவலர் ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழம

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

நாகர்கோவில், ஜன.8:கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இதுவரை 10949 அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதன் செயல் அலுவலர் ஏ. சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இச்சேவை 1.1.2009-ல்  தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 9 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இதுவரை 10949 அவசரகால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3,903 சாலை விபத்துகள், 2241 பிரசவகால உதவிகள், 135 தீவிபத்துகள் அடங்கும்.  

மாவட்டத்திலுள்ள ஒன்பது 108 இலவச அவசர சிகிச்சை ஊர்திகளிலும் ஆம்புலன்ஸ் தினம் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →