நெல்லை, தென்காசியில் மேலும் 33 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை 30 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,106 ஆக உயா்ந்துள்ளது.
208 போ் பலி: மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 13,589 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 309 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 208 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7791ஆக உயா்ந்துள்ளது. மேலும், 19 போ் முழுமையாக குணமடைந்ததன் மூலம் இதுவரை 7513போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 125 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.