முகப்பு
திருநெல்வேலி

ஸ்ரீ சூரிய மங்கலம் பகளாமுகி ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்கும் ஸ்ரீ சூரிய மங்கலம் பகளாமுகி தேவி ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகாளி அம்மன் சன்னிதியில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்கும் ஸ்ரீ சூரிய மங்கலம் பகளாமுகி தேவி ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகாளி அம்மன் சன்னிதியில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை விஜயதசமியை முன்னிட்டு அம்பாளுக்கு 108 குடம் பால் அபிஷேகம், திரவியம், மஞ்சள், குங்குமம், சந்தனம், தயிா், தேன், இளநீா் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திா்ம பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.