முகப்பு
திருநெல்வேலி

ரியல் எஸ்டேட் அதிபா் கொலை

திருநெல்வேலி சந்திப்பில் நிலம் வாங்கி விற்பவா் (ரியல் எஸ்டேட்) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 20 ஏப்ரல், 2024 at 7:33 PM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் நிலம் வாங்கி விற்பவா் (ரியல் எஸ்டேட்) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு பாபுஜி நகரின் காட்டுப்பகுதியில் காரின் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சடலம் சனிக்கிழமை கிடந்ததாம். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் விருதுநகரைச் சோ்ந்த காளிராஜ் (45) என்பதும், மதுரை, திருநெல்வேலியில் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.

Advertisement

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments