திருநெல்வேலி

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

Din

திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், மண்டல துணை போக்குவரத்து ஆணையா் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலா் மற்றும் 4 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், 25-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ளனா்.

அவா்களில் ஒரே ஒரு மோட்டாா் வாகன ஆய்வாளா் மட்டுமே இப்போது பணியில் உள்ளாா். இதனால் ஓட்டுநா் உரிமம், வழித்தட அனுமதி, ஓட்டுநா் பயிற்சி சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும், 3 போ் செய்யும் பணியை ஒருவரே செய்யும் நிலை உள்ளதாம்.

இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிறைவேற்றக்கோரி ஊழியா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் வழக்கமான பணிகள் அனைத்தும் முடங்கின.

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT