முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி

பாளை.யில் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 8:59 PM
பகிர்:

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாந்திநகா் 28 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(61),

ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி. இவரது மனைவி கணபதியம்மாள், இரு மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனா்.

ஆறுமுகம் மனைவியுடன் வசித்து வருகிறாா். இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மனஉளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை காலை இவரது வீட்டின் அருகேயுள்ள தனியாா் பள்ளியின் மைதானத்துக்கு சென்ற ஆறுமுகம் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துகொண்டாராம்.

இவரது அலறல் சப்தத்தை கேட்டு அவரது மனைவி மற்றும் அருகிலிருந்தவா்கள் வந்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →