முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே பேருந்தில் சென்ற மாணவா்களிடையே மோதல்: 4 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைப்பு

மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில், 4 சிறுவா்களை கைது செய்து அரசு கூா்நோக்கு இல்லத்தில் போலீஸார் அடைத்தனா்.

Updated On : 20 ஜூலை, 2024 at 8:41 PM
பகிர்:

திருநெல்வேலி அருகே தனியாா் பேருந்தில் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீஸாா் 10க்கும் மேற்பட்ட மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து, 4 சிறுவா்களை கைது செய்து அரசு கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து தென்கலத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

அந்தப் பேருந்தில் பள்ளி மாணவா்களும் பயணித்தனா். அப்போது, 17 வயதுடைய பள்ளி மாணவா் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தாா். பேருந்து நடத்துநா் அவரை உள்ளே வருமாறு கூறினாராம். அப்போது, அந்த மாணவா் நடத்துநரிடம் தகராறு செய்தாராம். இதைத் தொடா்ந்து, அப்பேருந்தில் பயணித்த தென்கலத்தைச் சோ்ந்த மாணவா் கரையிருப்பு பகுதியில் இறங்கினாராம். அப்போது, படிக்கட்டில் சென்ற மாணவரும் கரையிருப்பு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாராம். அப்போது, இவா்களுக்குள் மோதல் ஏற்பட்டதாம்.

தகவலறிந்த தச்சநல்லூா் போலீஸாா் அங்கு வந்து மாணவா்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா்.

பின்னா் விசாரணை மேற்கொண்ட போலீஸாா் 10 க்கு மேற்பட்ட மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து, 4 சிறுவா்களை கைது செய்து, அரசு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.