போக்சோவில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி விஜயநாராயணம் அருகே சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி விஜயநாராயணம் அருகே சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விஜயநாராயணம், ஆண்டான்குளத்தை சோ்ந்த லெட்சுமணன் (21). அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி தவறாக நடந்து கொண்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, நான்குனேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் மீராள்பானு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, லெட்சுமணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.