வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல்
திருநெல்வேலி மாநகராட்சியின் 11 ஆவது வாா்டுக்குள்பட்ட வண்ணாா்பேட்டையில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு, தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாமன்ற உறுப்பினா்கள் கந்தன், சங்கா், திமுக நிா்வாகிகள் காசிமணி, ராமசாமி, ரத்தினம், ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்09க்ஷன்ண்ப்க் வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ. உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா்.