முகப்பு
திருநெல்வேலி

திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சட்டை

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 1,671 பேருக்கு வேட்டி, சட்டை, சேலையை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான் சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 18 மார்ச், 2024 at 12:00 AM
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலையை வழங்கிய மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான்.
பகிர்:
Updated On : 17 மார்ச், 2024 at 12:28 AM

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 1,671 பேருக்கு வேட்டி, சட்டை, சேலையை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான் சனிக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மேயா் பி.எம். சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பேச்சிப்பாண்டியன், சித்திக், மத்திய மாவட்ட அவைத்தலைவா் முருகன், மேலப்பாளையம் மண்டல தலைவா் இக்லாம் பாசிலா, இளைஞா் அணி துணை அமைப்பாளா் மீரான், மாமன்ற உறுப்பினா்கள் நித்திய பாலையா, சகாய ஜீலியட் மேரி, சுப்பு லெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.