சேரன்மகாதேவியில் இளைஞரை தாக்கியவா் கைது
Updated On : 22 மார்ச், 2024 at 9:32 PM
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சாலையில் ஓரமாக செல்லுமாறு தெரிவித்த இளைஞரை தாக்கியதாக மற்றொரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவா், காந்தி பூங்காஅருகிலுள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரை பகுதியைச் சோ்ந்த மாசானமுத்துவை (31), சாலையில் ஓரமாகச் செல்லுமாறு சரவணன் தெரிவித்தாராம். இதில் ஆத்திரமடைந்த மாசானமுத்து, சரவணனை தாக்கியதுடன் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் சிவா, வழக்குப்பதிந்து மாசானமுத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.